Friday, June 26, 2009

குறுந்தொகை

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"

இந்த குறுந்தொகை பாடலினை(சங்ககால பாடல்) அறியாதவர்கள் தமிழகத்தில் அநேகம். முழுப்பாடலினை இல்லாவிட்டாலும் "செம்புலப் பெயல் நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" என்ற வரிகளை நிச்சயம் அறிவர்.


'இருவர்' படத்தினில் தொடங்கி இவ்வரிகளை வைரமுத்து 'சில்லுனு ஒரு காதல்' படம் வரை அங்கங்கே உபயோகித்திருப்பார்.


முதன்முதலில் இவ்வரிகளை 'இருவர்' படத்தில் கேட்டபொழுது அர்த்தம் புரியாவிட்டாலும் மிகவும் ரசித்தேன்.



அவ்வரிகளின் பொருள்தேடி அலைந்தேன். தமிழாசிரியரிடம் கேட்கவும் பயம். பாடத்தில் சந்தேகம் கேட்காமல் படத்திலா கேட்கிறாய் என்று பெண்டு நிமிர்த்திவிட்டால். அர்த்தம் புரியாமலே அந்த வரிகளை மனப்பாடம் செய்து பாடி வந்தேன்.

ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா இதே வரிகளை மேற்க்கோள் காட்டி கவிஞர் மீரா அவர்களின் ஒரு கவிதையினை பற்றி எழுதியிருந்தார். இப்பாடலின் அர்த்தத்தினை எப்படியாவது அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் மீண்டும் என்னுள் துளிர்த்தது. ஆனால் முடியவில்லை, என் நட்பு வட்டம் மிகவும் சிறியது மற்றும் இம்மாதிரி இலக்கியத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதது.

இப்படியாக இருக்கையில் வாலி இதே வரிகளை 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் உபயோகித்திருந்தார்.


இம்முறை விடுவதாக இல்லை. சற்று தீவிரமாக தேடிய பொழுது http://www.tamilvu.org/ வலைதளத்தில் கிடைத்தது.
இப்பாடலின் அர்த்தம் என்னவென்றால்:

"என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ?
என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எப்படி உறவினர்?
நானும் நீயும் ஒருவருக்கு ஒருவர் எவ்வாறு அறிந்தோம்?
இவ்வாறு எந்த சம்பந்தமும் இல்லாத நம் இருவரின் மனமும்
செம்மண்ணில் நீர் கலந்தால் எப்படி பிரிக்க முடியாதோ
அவ்வாறு இயல்பாக கலந்து விட்டன".

அர்த்தம் புரிந்த பின்பு இந்த பாடல் எனக்கு இன்னும் சுவை தருவதாக இருந்தது.


இன்னா நைனா 'ஆய்'ங்குற, 'ஆந்தை'ங்குற, 'சொம்பு'ங்குற ஒன்னிமே பிரியமாட்டேங்குது இதுக்குதான் உன் blog பக்கம் வர்றதில்ல, ஒரு எழவும் பிரிய மாட்டேங்குதுனு என்னிய திட்டும் தோஸ்துகளுக்கு, இந்த கானா பாட்டு இன்னா சொல்லுதுனா:

4 comments:

Mathan said...

Super Naaina...Ippothan Nalla puriyuthu...

AshWin said...

Thailavar didnt write lyrics for the song in Jillunu oru kathal... it was Evergreen Vaali ..FYI ..
btw ..IF you can understand telugu, just listen same narumugaye in Telugu.. It is even sweet there..another citation of pure tamil words used by Vairamuthu/ARR is Yaakai thiri song from Ayyutha ezhathu...

தியாகு said...

Ashwin, thanks for the update.. was too lazy to search.. between "Yaakkai Thiri" I did read that kavithai.. will find time to post the original.

Anonymous said...

Romba arumai.....migavum rasithen...rajendran,KC-Mainframe Ops