Wednesday, June 24, 2009

2 to 2 to 2:2

அன்பே சிவம் படத்தினை பார்த்தவர்களுக்கு இந்த பதிவின் தலைப்பினை படிப்பதில் சிரமமேதும் இருக்காது.

எங்களுடைய ஊரின் பிரதான தொழில்களாக இருப்பவை விவசாயம், கைத்தறி, பீடி மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளாகும். நாள் முழுவதும் உழைத்து களைப்பவர்கள் பெரும்பாலும் மாலை நேரங்களில் களைப்பாருவது திரையரங்குகளில்தான். பெரும்பாலும் திரைப்படத்தினை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்பவர்கள். வீடு, உச்சி வெயில் போன்ற பீரியட் படங்கள் இரண்டு நாட்களுக்கு மேல் அரங்கில் தங்காது, அதுவே அதிகம்.

குருதி புனல் வெறும் நான்கு நாட்கள்தான் ஓடியது என்றால் பார்த்து கொள்ளுங்கள். எம்மக்கள் அரங்கில் உட்கார்ந்து யோசிக்கக்கூட யோசிப்பவர்கள். குருதி புனலில் நாசரை ஏன் கொன்று உப்புபோட்டு புதைக்காமல்விட்டார் என்று கேட்டால் பெரும்பாலனோர் விழிப்பார்கள்.

ரஜினி படங்கள் தவறாமல் நூறு நாட்கள் ஓடும்.

"ஹே ராம்" படத்தின் முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாக தியேட்டரில் விஞ்சியிருந்தது பத்து நபர்கள்தான்.

அம்மன் படம் திரையிட்டப்பொழுது லக்ஷ்மி தியேட்டர் வாசலில் ஒரு தற்காலிக அம்மன் கோவில் கட்டப்பட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்படியான ஊரில் "அன்பே சிவம்" படம் வெளிவந்தது. நானும் என் அத்தை மகனும்(ஓய்) படம் பார்க்கச்சென்றோம். என் வலப்பக்கம் அவன் அமர்ந்தான், இடப்பக்கம் ஒருவர் உழைத்து களைத்து வந்தமர்ந்தார். படம் ஓடிக்கொண்டிருந்தது, ஆரம்பம் அமர்களமாக இருந்தது, அனைவரும் ரசித்தார்கள், மெல்ல படத்தின் கதை தீவிரமடையத்தொடங்கியது, அந்த காட்சியும் வந்தது. ரயில்வே நிலைய அதிகாரி மாதவனிடம் சென்னை செல்லும் ரயில் அந்த நிலையத்தில் நிற்கும் நேரம் "2 to 2 to 2:2" என்று சொன்னார், முதலில் எங்களுக்கும் கமல் & மாதவனைப்போல புரியவில்லை, ரயில்வே மாஸ்டர் திரும்பவும் சொன்னார், கமலுக்கு புரிந்தது, மாதவனுக்கும், எங்களுக்கும் புரியவில்லை. இப்போது கமல் விளக்கினார் மாதவனுக்கும், எனக்கும் புரிந்தது. மாதவன் கடுப்பானார், நான் சிரித்தேன், தியேட்டரில் ஒருசிலர் சிரித்தனர், 'ஓய்'க்கு புரியவில்லை.



'ஓய்'க்கு விளக்கிக்கூறினேன், அவனும் ரசித்து சிரித்தான். மற்றொருவருக்கு புரியவில்லை என்பதையும் அவர் எங்களை கவனித்துக்கொண்டிருந்தார் என்பதையும் நான் அறியவில்லை.

என்னிடம் கேட்கத்தயங்கியவர் கமலின் மேல் கடுப்பாகி எழுந்து நின்று தியேட்டரில் உள்ள அனைவரும் கேட்கும்படி உரக்க "ங்கோத்தா, இதுக்குதான் இவன் படத்துக்கு வர்றதுஇல்ல, ஒரு எழவும் புரிய மாட்டேங்குது" என்று கத்திவிட்டு தியேட்டரின் வெளிவாசல் நோக்கி வேகமாக சென்றுவிட்டார்.

1 comments:

Mathan said...

Ha Ha Ha...