Friday, June 26, 2009

குறுந்தொகை

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"

இந்த குறுந்தொகை பாடலினை(சங்ககால பாடல்) அறியாதவர்கள் தமிழகத்தில் அநேகம். முழுப்பாடலினை இல்லாவிட்டாலும் "செம்புலப் பெயல் நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" என்ற வரிகளை நிச்சயம் அறிவர்.


'இருவர்' படத்தினில் தொடங்கி இவ்வரிகளை வைரமுத்து 'சில்லுனு ஒரு காதல்' படம் வரை அங்கங்கே உபயோகித்திருப்பார்.


முதன்முதலில் இவ்வரிகளை 'இருவர்' படத்தில் கேட்டபொழுது அர்த்தம் புரியாவிட்டாலும் மிகவும் ரசித்தேன்.



அவ்வரிகளின் பொருள்தேடி அலைந்தேன். தமிழாசிரியரிடம் கேட்கவும் பயம். பாடத்தில் சந்தேகம் கேட்காமல் படத்திலா கேட்கிறாய் என்று பெண்டு நிமிர்த்திவிட்டால். அர்த்தம் புரியாமலே அந்த வரிகளை மனப்பாடம் செய்து பாடி வந்தேன்.

ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா இதே வரிகளை மேற்க்கோள் காட்டி கவிஞர் மீரா அவர்களின் ஒரு கவிதையினை பற்றி எழுதியிருந்தார். இப்பாடலின் அர்த்தத்தினை எப்படியாவது அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் மீண்டும் என்னுள் துளிர்த்தது. ஆனால் முடியவில்லை, என் நட்பு வட்டம் மிகவும் சிறியது மற்றும் இம்மாதிரி இலக்கியத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதது.

இப்படியாக இருக்கையில் வாலி இதே வரிகளை 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் உபயோகித்திருந்தார்.


இம்முறை விடுவதாக இல்லை. சற்று தீவிரமாக தேடிய பொழுது http://www.tamilvu.org/ வலைதளத்தில் கிடைத்தது.
இப்பாடலின் அர்த்தம் என்னவென்றால்:

"என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ?
என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எப்படி உறவினர்?
நானும் நீயும் ஒருவருக்கு ஒருவர் எவ்வாறு அறிந்தோம்?
இவ்வாறு எந்த சம்பந்தமும் இல்லாத நம் இருவரின் மனமும்
செம்மண்ணில் நீர் கலந்தால் எப்படி பிரிக்க முடியாதோ
அவ்வாறு இயல்பாக கலந்து விட்டன".

அர்த்தம் புரிந்த பின்பு இந்த பாடல் எனக்கு இன்னும் சுவை தருவதாக இருந்தது.


இன்னா நைனா 'ஆய்'ங்குற, 'ஆந்தை'ங்குற, 'சொம்பு'ங்குற ஒன்னிமே பிரியமாட்டேங்குது இதுக்குதான் உன் blog பக்கம் வர்றதில்ல, ஒரு எழவும் பிரிய மாட்டேங்குதுனு என்னிய திட்டும் தோஸ்துகளுக்கு, இந்த கானா பாட்டு இன்னா சொல்லுதுனா:

Wednesday, June 24, 2009

2 to 2 to 2:2

அன்பே சிவம் படத்தினை பார்த்தவர்களுக்கு இந்த பதிவின் தலைப்பினை படிப்பதில் சிரமமேதும் இருக்காது.

எங்களுடைய ஊரின் பிரதான தொழில்களாக இருப்பவை விவசாயம், கைத்தறி, பீடி மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளாகும். நாள் முழுவதும் உழைத்து களைப்பவர்கள் பெரும்பாலும் மாலை நேரங்களில் களைப்பாருவது திரையரங்குகளில்தான். பெரும்பாலும் திரைப்படத்தினை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்பவர்கள். வீடு, உச்சி வெயில் போன்ற பீரியட் படங்கள் இரண்டு நாட்களுக்கு மேல் அரங்கில் தங்காது, அதுவே அதிகம்.

குருதி புனல் வெறும் நான்கு நாட்கள்தான் ஓடியது என்றால் பார்த்து கொள்ளுங்கள். எம்மக்கள் அரங்கில் உட்கார்ந்து யோசிக்கக்கூட யோசிப்பவர்கள். குருதி புனலில் நாசரை ஏன் கொன்று உப்புபோட்டு புதைக்காமல்விட்டார் என்று கேட்டால் பெரும்பாலனோர் விழிப்பார்கள்.

ரஜினி படங்கள் தவறாமல் நூறு நாட்கள் ஓடும்.

"ஹே ராம்" படத்தின் முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாக தியேட்டரில் விஞ்சியிருந்தது பத்து நபர்கள்தான்.

அம்மன் படம் திரையிட்டப்பொழுது லக்ஷ்மி தியேட்டர் வாசலில் ஒரு தற்காலிக அம்மன் கோவில் கட்டப்பட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்படியான ஊரில் "அன்பே சிவம்" படம் வெளிவந்தது. நானும் என் அத்தை மகனும்(ஓய்) படம் பார்க்கச்சென்றோம். என் வலப்பக்கம் அவன் அமர்ந்தான், இடப்பக்கம் ஒருவர் உழைத்து களைத்து வந்தமர்ந்தார். படம் ஓடிக்கொண்டிருந்தது, ஆரம்பம் அமர்களமாக இருந்தது, அனைவரும் ரசித்தார்கள், மெல்ல படத்தின் கதை தீவிரமடையத்தொடங்கியது, அந்த காட்சியும் வந்தது. ரயில்வே நிலைய அதிகாரி மாதவனிடம் சென்னை செல்லும் ரயில் அந்த நிலையத்தில் நிற்கும் நேரம் "2 to 2 to 2:2" என்று சொன்னார், முதலில் எங்களுக்கும் கமல் & மாதவனைப்போல புரியவில்லை, ரயில்வே மாஸ்டர் திரும்பவும் சொன்னார், கமலுக்கு புரிந்தது, மாதவனுக்கும், எங்களுக்கும் புரியவில்லை. இப்போது கமல் விளக்கினார் மாதவனுக்கும், எனக்கும் புரிந்தது. மாதவன் கடுப்பானார், நான் சிரித்தேன், தியேட்டரில் ஒருசிலர் சிரித்தனர், 'ஓய்'க்கு புரியவில்லை.



'ஓய்'க்கு விளக்கிக்கூறினேன், அவனும் ரசித்து சிரித்தான். மற்றொருவருக்கு புரியவில்லை என்பதையும் அவர் எங்களை கவனித்துக்கொண்டிருந்தார் என்பதையும் நான் அறியவில்லை.

என்னிடம் கேட்கத்தயங்கியவர் கமலின் மேல் கடுப்பாகி எழுந்து நின்று தியேட்டரில் உள்ள அனைவரும் கேட்கும்படி உரக்க "ங்கோத்தா, இதுக்குதான் இவன் படத்துக்கு வர்றதுஇல்ல, ஒரு எழவும் புரிய மாட்டேங்குது" என்று கத்திவிட்டு தியேட்டரின் வெளிவாசல் நோக்கி வேகமாக சென்றுவிட்டார்.

Sunday, June 14, 2009

Do you need a lift??

பணி நிமித்தமாக மீண்டும் ஒருமுறை டாலர் தேசத்திற்கு 60 நாள் பயணமாக வந்துள்ளேன். உடன் வந்துள்ள நண்பர், ஆறுமுகம்.. அறுபது நாட்களும் ஹோட்டல் வாசம். இருவருக்கும் சமையல் செய்யும் வசதியுடன் கூடிய தனித்தனி சிறிய அறை. இந்தியாவிலிருந்து வரும்போது பெரும்பாலான சமையல் பொருட்களை கொண்டு வந்து இருந்தோம். வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறிகளை அங்குள்ள கடையில் சென்றுதான் வாங்க வேண்டும்.
ஹோட்டலிலிருந்து பல்பொருள் அங்காடி 0.5 மைல் தூரமே. அலுவலகம் முடிந்ததும் ஆங்கிலேய நண்பர் ஒருவர் தன்னுடைய காரில் எங்களை கடையில் கொண்டு விட்டுச்சென்றார். பொருட்களை வாங்கி வெளியே வரும்பொழுது நல்ல மழை, கையில் குடையும் இல்லை, call taxiயினை கூப்பிட mobile இல்லை. பொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக் கவர்களை கையில் பிடித்தப்படி மழை நிற்க காத்திருந்தோம்.

மழை விடுவதாக இல்லை, விடாமல் நாங்களும் நகர்வதாக இல்லை. கடை வாசலிலேயே காத்திருந்தோம். ஒரு வெள்ளை நிற Honda City வந்து நின்றது. 60 வயது மதிக்கத்தக்க இந்திய இளைஞ்சர் குடையுடன் இறங்கி கடை நோக்கி வந்தார். வடஇந்தியர்.

எங்களை கண்டவுடன் ஒரு புன்னகையினை உதிர்ந்தார், பதிலுக்கு நாங்களும். அருகில் வந்தவர் நாங்கள் மழைக்காக ஒதுங்க்கியிருப்பதை உணர்ந்தார். எங்களுடைய பூர்வீகம், அமெரிக்கா வந்திருப்பதின் நோக்கம் முதலியவற்றினை கேட்டறிந்தார், நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் உட்பட.

மழை தொடர்ந்து பூமியினை ஆசிர்வதித்து கொண்டிருந்தது. பெரியவர் தற்பொழுது ஹோட்டல் இருக்கும் தூரத்தினையும், வழியினை பற்றியும் விசாரித்துக்கொண்டிருந்தார், அவர் எங்களுக்கு உதவ முனைகிறார் என்பதை உணர்ந்த எனக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி உருகொண்டது, தானாக முன்வந்து உதவ முனைபவரை காண பெருமையாகவும் இருந்தது.
எல்ல கேள்விகளுக்கும் எங்களிடமிருந்து பதிலை பெற்றுக்கொண்டவர் கேட்டார்;

The hotel is very close from here, right?

Yes sir, it is just half a mile from here, but since it is raining we are not able to go, waiting for it to stop.

Oh, I got you, I have a better idea.

Tell us sir? :-)

You both go inside the shop and ask for additional plastic covers. They will definetly give. Put it on your head and walk to the hotel. Your head won't get wet, it will be easy to walk in the rain with cover on head.

!@#$%^&*(), Thank you very much sir, we are also thinking about the same only.

That's good, have a good day kids. bye.

Thank you sir, you too, take care, see you, bye...

Tuesday, June 02, 2009

காந்தியும் பிரபாகரனும்

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1461

Monday, June 01, 2009

படித்ததில் பிடித்தது - 2


'வாய்யா நீலகண்டா!
M.G.ராமச்சந்திரனை சுட்டேன்.
அவனும் சாவலை.
என்னை சுட்டுக்கிட்டேன்.
நானும் சாவலை.
என்னய்யா துப்பாக்கி
கண்டுப்புடிச்சிருக்கானுங்க?
இதை வெச்சுகிட்டுத்தான்
சீனாக்காரனை
ஓட்டப்போறாங்களா?'

- டைரக்டர் ப.நீலகண்டனிடம் எம்.ஆர்.ராதா

புத்தகம் - M.R.ராதாயணம், கிழக்கு பதிப்பகம்