Tuesday, July 28, 2009

யாரப்பாத்து பொண்ணுன்னு சொன்ன...

என்னுடைய தந்தை வழி தாத்தாவை நான் போட்டோவில் மட்டுமே பார்க்கும் வாய்ப்பை பெற்றவன். தாய் வழி தாத்தா சிறுவயதில் ஒரு ஹிட்லராகவே எனக்கு தெரிந்தார்.

டில்லி தாத்தா, தந்தை வழி தாத்தாவின் தங்கையின்("சைதாபேட்டை அத்தை", பாட்டி என்றுதான் அழைக்க வேண்டும், ஆனால் நாங்கள் சைதாபேட்டை அத்தை என்று தான் அழைப்போம்) கணவர்.சென்னை தீயனைப்பு துறையின் ஓட்டுனர் மற்றும் வாகன பழுது பார்க்கும் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.

1970களிலேயே நான்கைந்துமுறை தீயனைப்பு வண்டிகளை சென்னையிலிருந்து டில்லிவரை ஓட்டிச்சென்று வந்தவர். டில்லி தாத்தாதான் என் பால்யப்பருவ ஆதர்சன ஹீரோ.

ஒவ்வொரு முறை அவர் டில்லி சென்று வரும்போதும், தாத்தா அலாவுதீனின் கன்னி தீவிற்கு சென்று வந்ததை போல உணர்வோம். இரவு தூங்கும்முன் தன்னுடைய பயண அனுபவங்களை கதைகளாக எங்களுக்கு சொல்லுவார்.
எங்கள் குடும்பத்தில் யாரும் அதுவரை தமிழ் நாடு எல்லையைக்கூட தாண்டியது கிடையாததால் பொடிசுகளான நாங்கள் எல்லோரும் அவரை "டில்லி தாத்தா" என்று அழைக்க, செல்வராஜ் என்ற பெயர் டில்லி தாத்தா ஆனது.

டில்லி தாத்தா என்னை தன் சொந்த பேரனாகவும், என் அப்பாவை மகனாக கருதுபவர். அப்பாவை எப்பொழுதும் 'பையா' என்று தான் அழைப்பார். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கோடை விடுமுறைக்கு கண்டிப்பாக சென்னை சைதாபேட்டையிலுள்ள டில்லி தாத்தா வீட்டிற்கு செல்வோம். கிண்டியில் நேரு மாமா கையிலிருக்கும் புறாவை பேருந்திலிருந்து பார்த்தவுடன் மனசில் பட்டாம்பூச்சிகள் பறக்கும்.

இந்த சம்பவம் நடக்கும் பொழுது எனக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும். நாங்கள் சென்றபொழுது தாத்தாவிற்கு சென்னை தீவுத்திடலில் நடக்கும் அரசு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தீயணைப்பு நிலையத்தில் பணி. அன்று பணிக்கு செல்லும்பொழுது எங்களையும் உடன் அழைத்துச்சென்றிருந்தார்.

அதுவரை வெறும் பொம்மை கார், பஸ், ரயில்களை மட்டுமே வைத்து விளையாடிக்கொண்டிருந்த எனக்கு உண்மையான தீயணைப்பு வண்டியினை முதன்முதலில் கண்ணெதிரே பார்த்தவுடன் பெரும் குதுகலமானது. மகிழ்ச்சி எல்லா எல்லைகளையும் கடந்தது. அத்தை, அம்மா, அண்ணன், அக்கா அனைவரும் பொருட்காட்சியினை சுற்றி பார்க்க அழைக்க நானோ தீயணைப்பு வண்டியின் பிரம்மிப்பிலிருந்து அகலாமல் அவர்களுடன் செல்ல மறுத்து தாத்தாவுடனே தற்காலிக தீயணைப்பு நிலையத்தில் தங்கிவிட்டேன்.
அனைவரும் சென்றப்பின் தாத்தா என்னை வண்டியின் ஓட்டுனர் இருக்கையில் அமர்த்தினார்(நிற்கவைத்தார்). அவ்வளவுதான், ஓட்டுனர் உரிமம் கிடையாது, பயிற்சி கிடையாது, சாலை விதிகள் பற்றிய கவலைகள் கிடையாது, direct'taaa driverஆகி stearing பிடித்து வண்டியை 200 kmph வேகத்தில் ஓட்டத்தொடங்கினேன்.

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......... பீம்......... பீம்........பீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... டிங் டிங் டிங் டிங்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........டுர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...டிங் டிங் டிங் டிங்...

இப்படியாக எந்த சாலை விதிகளுக்கும் கட்டுப்படாமல் என் வண்டி அண்ணா சாலையில் பறந்துக்கொண்டிருந்தது. தாத்தா ஓட்டுனர் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து பேரன் வண்டி ஓட்டும் அழகினை ரசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, அவருடன் பணிபுரியும் மற்றொரு நபர் ஓடும் வண்டியில் ஏறி தாத்தாவின் அருகில் அமர்ந்து உரையாட தொடங்கினார்.

என்னப்பா செல்வராஜ் சாப்பாடு ஆச்சா?

இப்போதான் சாப்பிட்டேன் கணேசா, நீ சாப்பிட்டியா?

ஆச்சுப்பா...

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......... பீம்......... பீம்........

என்ன இந்த வருஷமும் இரண்டாவது ஊதிய குழுவோட பரிந்துரைய அமல்படுத்த மாட்டாங்க போல இருக்கு?

பீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... டிங் டிங் டிங்........

அப்படித்தான் தெரியுது, நேத்துதான் secretriatல சண்முகத்த பார்த்தேன், சந்தேகம்னு தான் சொன்னான்.

டுர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்ர்.....பீம்......... பீம்........டிங் டிங் டிங்........

யாரு குழந்தைப்பா இது.. துரு துருன்னு இருக்கு, கொஞ்சநேரம் அமைதியா இருக்காது போல(அப்பொழுது எனக்கு ஜடை போடும் அளவிற்கு தலையில் முடி இருந்தது. உபயம்: ஏழுமலையான் வேண்டுதல். பார்ப்பதற்கு பெண் குழந்தை போல இருந்திருக்கிறேன்).

என் மகனோட குழந்தைதாம்பா, எல்லோரும் பொருட்காட்சியை பார்க்க போய் இருக்காங்க.

டுர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்ர்.....பீம்......... பீம்........பீம்ம்ம்ம்ம்...

ஆமாம் நானும் பார்த்தேன், அப்படி தான் சொன்னாரு,

டுர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்ர்.....பீம்......... பீம்........பீம்ம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......
ம்ம்ம்ம்...

ஒவ்வொரு வருஷமும் ஏதாவது காரணம் சொல்லி தள்ளிகிட்டே போறாங்க. இப்படி இழுத்துகிட்டே போனா பொழப்ப எப்படி ஓட்டுறதுன்னு புரியல செல்வராஜ்.

டுர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்ர்.....பீம்......... பீம்........டிங் டிங் டிங்........

(இப்பொழுது கணேசன் நான் வண்டி ஓட்டும் சத்தத்தால் கடுப்பாகி சற்று கடுமையுடன் சொன்னார்)
"இந்தா பொண்ணே, ஏன் சும்மா கத்திகிட்டு இருக்க, கொஞ்சநேரம் அமைதியா உட்காரு.. கீழே விழப்போற...."

அவ்வளுதான் எனக்கு கடுமையாக கோபம் வந்து விட்டது, stearing'கை அப்படியே விட்டுவிட்டு அவரை பார்த்து சத்தமாக..

"இன்னா, யாரப்பாத்து பொண்ணுன்னு சொன்ன, நான் பொண்ணு இல்ல, பையன் தெரியுமா, இங்க பாரு எனக்கு !@#$%^& இருக்கு, அஹாங்" என்று சொல்லி டவுசரை அவிழ்த்து காட்டிவிட்டு மீண்டும் சாலை பார்த்து வண்டியை ஓட்ட தொடர்ந்தேன்.

டுர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்ர்.....பீம்......... பீம்........பீம்ம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

!!!! நாங்கெல்லாம் யாரு தெரியும்ல, ஆம்பளை
சிங்கமாக்கும்!!!

1 comments:

Palani said...

arumaiyana antha naal igabagam..................... Keep posting.........