Friday, October 22, 2010
Thursday, May 27, 2010
வாழ்க்கை
ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிபடியாக திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக மூத்திரம் போனாலே சந்தோசப்படுகிறேன், வாழ்க்கை இவ்வகையில் படிப்படியான சமரசங்களால் ஆனது.
- சுஜாதா
Labels: சுஜாதா
Posted by தியாகு at 9:37 PM 1 comments
Tuesday, March 02, 2010
சுஜாதா
தற்பொழுது சுஜாதாவின் "கணையாழியின் கடைசிப் பக்கங்கள்" (விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு) புத்தகத்தினை படித்து வருகிறேன். 1970களில் தொடங்கி எழுதி வந்திருக்கிறார். இதுவரை படித்ததில் கவர்ந்த சில பகுதிகள் கீழே:
ஆகஸ்ட் 1974 --
படிக்கும்போதே இதழோரம் அரும்பும் புன்னகையினை மறைக்க முடியவில்லை. புன்னகைத்து தலை உயர்த்திப்பார்த்தால் ரெயிலில் குறைந்தது நான்கு கண்கள் என்னை பார்த்துக்கொண்டிருகிறது.
Labels: சுஜாதா, படித்ததில் பிடித்தது
Posted by தியாகு at 9:56 PM 0 comments
Thursday, February 25, 2010
Testophobia
Labels: கூட்டாஞ்சோறு
Posted by தியாகு at 10:19 AM 0 comments
Friday, February 12, 2010
சில புகைப்படங்கள்
Labels: அத்தனை உலகமும் வர்ணக்களஞ்சியமாய்...
Posted by தியாகு at 2:03 AM 0 comments
Friday, February 05, 2010
எங்கும், எங்கும், பிளாஸ்டிக் மயம்
நேற்று குளித்து முடித்து துண்டினை உலர்த்த மொட்டை மாடி சென்ற பொழுது பார்த்த "பிளாஸ்டிக் முறம்".
வீட்டின் உரிமையாளர் கோதுமையினை அந்த முறத்தில் பரப்பி காய வைத்திருந்தார். நேற்றுதான் முதன்முதலாய் நான் பிளாஸ்டிக் முறத்தினை பார்க்க நேர்ந்தது. மூங்கில் கொண்டு முடையபட்டதை போல அச்சு கொண்டு செய்யப்பட்ட ஒன்று.
பார்த்தவுடன் ஆச்சர்யம் மேலோங்காமல் ஒருவித வருத்தமே தோன்றியது. உடன், சமீபத்தில் தீராத பக்கங்களில் படித்த கவிதை ஒன்று கண்முன்னே நிழலாடியது:
பிளாஸ்டிக் மரங்களை பயிரிடுவோம்
பிளாஸ்டிக் கிளைகளில் பிளாஸ்டிக் பறவைகள்
பிளாஸ்டிக் கதிர்களில்
பிளாஸ்டிக் தானியங்களை மகசூல் செய்வோம்
பிளாஸ்டிக் பசுக்களின் பிளாஸ்டிக் மடிகளில்
பிளாஸ்டிக் பாலருந்துவோம்.
அருகே சென்று சில கோதுமை தானியங்களை கையிலெடுத்து உற்று பார்த்தேன், பிளாஸ்டிக் அல்ல நிஜ தானியங்கள்தான்.
Labels: பிளாஸ்டிக்
Posted by தியாகு at 1:37 AM 0 comments
கொஞ்சம் தேநீர் நிறைய கண்ணீர்
சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்துவின் கொஞ்சம் தேநீர் நிறைய வானம் கவிதை தொகுப்பில் "ஆளுக்கொரு கோப்பை" என்றொரு கவிதையினை படித்தேன்.நான் தேநீர் அருந்தும் முறையினை மாற்றிய வரிகள் அவை. அதுவரை தேநீர் அருந்துவதை ஒரு தினசரி கடனாக செய்துவந்தவன் அந்த தருணங்களை சிறிது ரசிக்க முயற்ச்சித்தேன்.
கவிதையின் சில வரிகள்:
தேநீர் பருகும் கணங்கள்
சில நிமிட திருவிழாக்கள்
.......
கூப்பிட்டபோது
வரம்தந்தோடிப்போகும்
மலிவு தெய்வம் தேநீர்
உதடுகளில் சூடுகொளுத்தி
கதகதப்பாய் நாவுதடவி
சுவயரும்புகள் ஒவ்வொன்றாய்த்
தொட்டெழுப்பி
.........
ஆனால் தேவரீர்
தேநீர்பருகத் தெரியவில்லை
உங்கட்கு
பொன்கரைத்த அதன் நிறம் பாராமல்
எங்கேயோ வெறிக்கிரீர்கள்
நுரையுடையும் அதன்
மொழிகேளாமல்
அர்த்தம் வற்றிய சொற்களால்
பெசிக்கொண்டிருகிறீர்கள்
....
தேநீர் தத்துவமே
புரியாத நீங்கள்
எங்கனந்தான் புரிவீரோ
இருப்பை
இறப்பை
கடவுளை
காதலை
அணுவை
அண்டத்தை
......
சென்னையின் நெருக்கடி மிகுந்த சைதையில் வைரமுத்துவின் வரிகள் உணர தேநீர் அருந்துவது பெரும்பாலும் சாத்தியப்படுவதில்லை. உதட்டில் தேநீர் கொண்டு சூடு கொளுத்தும்முன் சுட்டெரிக்கும் வெயில் மண்டையினை கொளுத்தி விடும், நுரையுடையும் நுண் ஒலிகள் வாகன இறைச்ச்சலில் கரைந்துவிடும், வாழ்க்கையின் தத்துவங்களே பெரும்பாலும் புரியாமல் விழிக்கும் பொழுது தேநீர் தத்துவதினை எங்ஙனம் யோசிப்பது. விடுமுறைகளில் ஊர் செல்லும் சில சமயம் நுரை உடையும் ஒலி கேட்டு, இமைகள் மூடி, உதடுகளில் சூடு பரப்பி அருந்தியதுண்டு. ஆனந்தமான தருணங்கள் அவை.
அந்த ஆனந்தமான தருணங்களை சமீபத்தில் புரட்டி போட்டது "எரியும் பனிக்காடு" நாவல். கொத்தடிமைகளாய் உலகினுடனான அனைத்து தொடர்புகளையும், வாழ்வின் அனைத்து சுகங்களையும் இழந்து, அட்டைகள் உறிஞ்சியது போக நில்லாமல் ஒழுகிய குருதியினை தேநீர்ச்செடி வேர்களில் ஊற்றி, தங்களை தாங்களே பலிகொடுத்து தேநீர் தோட்டங்களை உருவாக்கி வளர்த்த ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பின் பயனே இன்று உதகையிலும், மைசூரிலும், கூர்க்கிலும் உடலெங்கும் பச்சை உடை பூண்டிருக்கும் தோட்டங்கள்.
சில நாட்களாக பொன்கரைத்த தேநீரின் நிறம் ஆயிரக்கணக்கான மக்களின் ரத்தம் கலந்ததாலே வந்ததாக தோன்றுகிறது.
Labels: எரியும் பனிக்காடு, தேநீர், வைரமுத்து
Posted by தியாகு at 12:59 AM 0 comments
Wednesday, January 06, 2010
2010 சென்னை புத்தக கண்காட்சி / CCNA
௧. அறிந்தும் அறியாமலும் - ஞாநி - ஞானபாநு
௩. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (2005 வரையிலான சிறுகதைகள்) - உயிர்மை பதிப்பகம்
௪. காடு - ஜெயமோகன் - தமிழினி
௫. ஏழாம் உலகம் - ஜெயமோகன் - தமிழினி
௬. ரப்பர் - ஜெயமோகன் - கவிதா வெளியீடு
௭. ஓலைச்சுவடி (இந்துமத ஆசார-நம்பிக்கை ரகசியங்கள்) - Dr. வெங்கனூர் பாலகிருஷ்ணன் - ADDONE Publishing Group
௮. இது ராஜபாட்டை அல்ல - சிவகுமார் - அல்லயன்ஸ்
௯. தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன் - விகடன் பிரசுரம்
௧௦o௦௦. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம்
௧௧. இரும்பு குதிரைகள் - பாலகுமாரன் - திருமகள் பதிப்பகம்
௧௨. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி - காலச்சுவடு பதிப்பகம்
௧௩. பொய்த் தேவு - க.நா.சுப்ரமண்யம் - காலச்சுவடு பதிப்பகம்
௧௪. எரியும் பனிக்காடு(Red Tea) - இரா.முருகவேள்(P.H. Daniel) - விடியல் பத்திப்பகம்
௧௫. மகாபாரத உபகதைகள் - அரவிந்தன் - வானவில் புத்தகாலயம்
௧௬. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன் - தமிழ்ப்புத்தகாலயம்
௧௭. ஐந்நூறு கோப்பைத் தட்டுக்கள் - அசோகமித்திரன் சிறுகதைகள் - காலச்சுவடு பதிப்பகம்
௧௮. அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - விகடன் பிரசுரம்
௧௯. காட்டாறு - ஜே.ஷாஜஹான் - வம்சி புக்ஸ்
இனிமேலும் Certification எல்லாம் mandatory இல்லை என்று உதார் விட்டுக்கொண்டு பிழைப்பை ஓட்டமுடியாது போல உள்ளது.
2010௦-ஜனவரிக்குள்ளாக CCNA பரீட்சையினை முடிக்க வேண்டுமென்று என்னுடைய அலுவலகத்தில் வாங்கியுள்ள புதிய Cisco Nexus 7010 Switch மீது சபதம்(?) எடுத்துள்ளேன்.
சிவகாமியின் சபதம் நிறைவேறியதா என்று தெரியாது, எப்பாடுபட்டேனும் என்னுடைய சபதத்தை முடிக்க வேண்டும்.
Posted by தியாகு at 8:07 PM 3 comments