Wednesday, January 06, 2010

2010 சென்னை புத்தக கண்காட்சி / CCNA


இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்:

. அறிந்தும் அறியாமலும் - ஞாநி - ஞானபாநு
௨. "? - நாளையை கேள்விக்குறி ஆக்கும் இன்றைய அரசியல் பற்றி" - ஞாநி - ஞானபாநு
௩. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (2005 வரையிலான சிறுகதைகள்) - உயிர்மை பதிப்பகம் 
௪. காடு - ஜெயமோகன் - தமிழினி 
௫. ஏழாம் உலகம் - ஜெயமோகன் - தமிழினி 
. ரப்பர் - ஜெயமோகன் - கவிதா வெளியீடு 
௭. ஓலைச்சுவடி (இந்துமத ஆசார-நம்பிக்கை ரகசியங்கள்) - Dr. வெங்கனூர் பாலகிருஷ்ணன் - ADDONE Publishing  Group 
௮. இது ராஜபாட்டை அல்ல - சிவகுமார் - அல்லயன்ஸ் 
௯. தேசாந்திரி -  எஸ்.ராமகிருஷ்ணன் - விகடன் பிரசுரம்
௧௦o௦௦. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம் 
௧௧. இரும்பு குதிரைகள் - பாலகுமாரன் - திருமகள் பதிப்பகம்  
௧௨. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி - காலச்சுவடு பதிப்பகம் 
௧௩. பொய்த் தேவு - க.நா.சுப்ரமண்யம் - காலச்சுவடு பதிப்பகம் 
௧௪. எரியும் பனிக்காடு(Red Tea) - இரா.முருகவேள்(P.H. Daniel) - விடியல் பத்திப்பகம் 
௧௫. மகாபாரத உபகதைகள் - அரவிந்தன் - வானவில் புத்தகாலயம் 
௧௬. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன் - தமிழ்ப்புத்தகாலயம் 
௧௭. ஐந்நூறு கோப்பைத் தட்டுக்கள் - அசோகமித்திரன் சிறுகதைகள் - காலச்சுவடு பதிப்பகம் 
௧௮. அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - விகடன் பிரசுரம் 
௧௯. காட்டாறு - ஜே.ஷாஜஹான் - வம்சி புக்ஸ் 

சென்ற வருட கண்காட்சியில் வாங்கியவற்றில் சில புத்தகங்களே இன்னும் தூங்கிக்கொண்டு உள்ளன, அடுத்த வருடத்திருக்குள் அவற்றையும் சேர்த்து படித்து முடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

இவைகளுக்கு முன்பாக படிப்பதற்கு நான் இரண்டு வருடங்களாக வைத்து "முக்கி"க்கொண்டிருக்கும் ஒரு "முக்கிய" புத்தகம் உள்ளது. அது  "Cisco Certified Network Associate - Todd Lammle".

இனிமேலும் Certification எல்லாம் mandatory இல்லை என்று உதார் விட்டுக்கொண்டு பிழைப்பை ஓட்டமுடியாது போல உள்ளது.

2010௦-ஜனவரிக்குள்ளாக CCNA பரீட்சையினை முடிக்க வேண்டுமென்று என்னுடைய அலுவலகத்தில் வாங்கியுள்ள புதிய Cisco Nexus 7010 Switch மீது  சபதம்(?) எடுத்துள்ளேன்.
 
சிவகாமியின் சபதம் நிறைவேறியதா என்று தெரியாது, எப்பாடுபட்டேனும் என்னுடைய சபதத்தை முடிக்க வேண்டும்.

3 comments:

Unknown said...

நீங்கள் வாங்கியுள்ள புத்தகங்கள் எல்லாமே நல்ல வாசிப்பனுபவம் தரும்...

நேசன் said...

தம்பி

மாமல்லர் தன்னோட விசுவாசமான சேனாதிபதியான பரஞ்சோதி துணையோடு வாதாபிய அழிச்சி அங்கிருந்து சிவகாமிய உங்க ஊரு காஞ்சிபுரத்துக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. இதன் அந்த அம்மாவோட கனவு

பின் குறிப்பு - இந்த பரஞ்சோதிதான் பின்னாளில் சிறுத்தொண்ட நாயனார் என்ற சிறந்த சிவா பக்தனா ஆனார்.

இவர்தான் பிள்ளையார் என்ற கடவுளை தமிழகத்துக்கு அறிமுகபடுதினார்நும் ஒரு பேச்சு இருக்கு.

தியாகு said...

நன்றி நேசன் அவர்களே,

சிவகாமியின் சபதம் - நான் படித்த நாவல் தான். சமீபத்தில் தான் சு.ரா.வின் "ஜே.ஜே. சில குறிப்புகள்" படித்தேன், அதன் தாக்கமே அந்த கேள்வி.

பிள்ளையார் பற்றிய தகவல் எனக்கு புதியது, பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி.